இந்த நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி

 
school-dpi

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வி ஆண்டுக்காக கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.

students

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

DPI

மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

From around the web