பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!! தொடரும் சோகம்!

 
Mamallapuram

மாமல்லபுரம் பூஞ்சேரியில் அரசு மேல்நிலை பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் கஜசுபமித்ரா(14). இவர், மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

jump

இந்நிலையில் இன்று மாலை 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அப்பள்ளியின் 2-வது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து கொண்டு, தேர்வு எழுத முயன்றதாக தெரிகிறது. இதனை வகுப்பறையில் உள்ள ஆசிரியை கண்டுபிடித்து மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், நாளை பள்ளிக்கு வரும் போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று மாணவியிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி கஜசுபமித்ரா திடீரென 2-வது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி கஜசுபமித்ராவை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

mamallapuram

தற்போது மாணவி கஜசுபமித்ரா மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மாமல்லபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web