மாநிலங்களவை தேர்தல்.. திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்..!

 
DMK

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22-ம் தேதி முடிகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக எம்பிக்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 22-ம் தேதியுடன் முடிகிறது.

இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்தது. வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி வருகிற 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 31-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந் தேதி ஆகும்.

DMK-MP-announced

ஜூன் 10-ந் தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் இத்தேர்தலில் திமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில் திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும் திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

From around the web