திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
cm-mk-stalin-speech-about-dravidian-model-to-muslims-in-ramadan-event

ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான் என இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதன் பின் முதல்வர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகியுள்ளது. இதுவும் ஒருவகையில் திராவிட மாடல் தான். திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது. அனைவருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம், கொள்கை.

ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006-ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி தான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web