சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது இந்திய மருத்துவ இயக்குநரகம்!

 
Sharmika

பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சியின் மகளும் சித்த மருத்துவருமான ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சியின் மகளான டாக்டர் ஷர்மிகா ஒரு சித்தமருத்துவர். இவர் யூடியூப் சேனல்களில் உடல்நலம் சம்பந்தமாக கருத்து தெரிவித்தார். டாக்டர் ஷர்மிகா அறிவியலுக்கு புறம்பாக கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டார்.
Sharmika
சமீபத்தில் டாக்டர் ஷர்மிகா யூடியூப் சேனல்களுக்கு அளித்த நேர்காணல்களில், இந்தியர்கள் மனிதர்களை விட பெரிய விளங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பனை நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என்று கூறியதையடுத்து, டாக்டர் ஷர்மிகாவை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர். 
மேலும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்; கடவுள் மனசு வைத்தால்தான் குழந்தை பிறக்கும் என்று கூறி நெட்டிசன்களில் மீம்ஸ் கண்டெண்ட் ஆனார். இது மட்டுமல்ல, கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று அறிவியலுக்கும் மருத்துவத்துக்கும் புறம்பான தகவல்களைக் கூறியதாக டாக்டர் ஷர்மிகா கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
Sharmika
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

From around the web