தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்! காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

 
Sankarankovil

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த 3 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் கருத்தப்பாண்டி. இவரது மகள் கௌசல்யா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்திக் (25) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 7-ம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

Sankarankovil

இந்த நிலையில் நேற்று (செப்.10) கார்த்திக் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கௌசல்யா மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திக் உடனடியாக கௌசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார், கௌசல்யா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌசல்யாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sankarankovil

திருமணமாகி மூன்று நாட்களே ஆவதால் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்த 3 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web