சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ப்ளஸ்-1 மாணவி தற்கொலை.! ஆசிரியர் திட்டியதால் விபரீதம்

 
Chennai

சென்னை பல்லாவரம் பம்மல் அருகே உள்ள பொழிச்சலூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவரது மகள் ஹரிணி (16). இவர் பல்லாவரம் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது. தேர்வுக்கு ஹரிணி முறையாக தயார் ஆகாததால் தான் கொண்டு சென்ற பிட்டு பேப்பரை வைத்து காப்பியடித்துள்ளார். இதனை கவனித்த ஆசிரியை ஹரிணியை கண்டித்துள்ளார்.

suicide

இதனால் மனமுடைந்த ஹரிணி நேற்று வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்கு செல்லும் வரை பள்ளிக்கு தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்தவர் வீட்டில் அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

Tambaram

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மாணவியின்  உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web