ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு 

 
Gold-Price
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய மாலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,240-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,905-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.67,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web