அதிர்ச்சி! பாஸ்தா சாப்பிட்ட புதுமணப்பெண் திடீர் மரணம்!!

 
Villupuram

விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி பிரதிபா(22). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் மாதம் 13-ம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டனர்.

Villupuram

நேற்று நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வரும் போது விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ பார் என்ற உணவகத்தில் பாஸ்தாவை வாங்கி சாப்பிட்டு வந்து வீட்டில் படுத்துள்ளனர். இரவு நேரத்தில் உணவு செரிக்காமல் அவதியடைந்த பிரதீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று காட்டும் போது டாக்டர் புட் பாய்சன் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை பழனி கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததால் தான் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Villupuram

உயிரிழந்த இளம்பெண் பிரதிபா இதய பிரச்சனைக்காக மாத்திரை எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இளம் பெண்உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், பிரதிபா சாப்பிட்டதாக கூறும் பாஸ்தா தயாரித்த உணவகம் மற்றும் கணவர் விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

From around the web