அதிர்ச்சி! வீட்டின் மேற்கூரை மாணவனின் மேலே இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. சிதைந்து போன முகம்!!

 
Tiruvarur

திருவாரூர் அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

திருவாரூர் மாவட்டம் அலிவலம் ஊராட்சியில் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதிக்கு ஆனந்த் (11) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 

Thiruvarur

இந்த நிலையில், வீட்டில் தனது பெற்றோருடன் படுத்திருந்த போது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்த 7-ம் வகுப்பு மாணவன் ஆனந்த் முகம் சிதைந்து உள்ளது. 

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் தாலூகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tiruvarur-Taluk-PS

விசாரணையில் விபத்து ஏற்பட்ட வீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று மேலும் 22 அரசு தொகுப்பு வீடுகள் அந்த பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web