அதிர்ச்சி! வீட்டில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம்... கொலையா? போலீசார் விசாரனை

 
Attur

ஆத்தூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  உள்ள கல்லாநத்தம்  கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது  மனைவி  சரண்யா (31). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மணிமாறன் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே  அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Dead-body

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது சரண்யா மர்மமான முறையில்  உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சரண்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் ஆத்தூர்  ஊரக  காவல் நிலையத்திற்கு தகவல்  அளித்துள்ளனர். 

Attur-PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக போலீசார் சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கொலையா? தற்கொலையா? என போலீசார்  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web