அதிர்ச்சி! கோல்டு காயின்ஸ் ஆப் மூலம் பணத்தை இழந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

 
Chennai

கோல்டு காயின்ஸ் என்ற ஆப்பில் விளையாடி கடன் தொல்லையால் மாணவர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சரண் (22). பி.காம் படித்துள்ளார். இவர், சென்னை மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்து சி.ஏ. படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த சரண், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
Suicide
சென்னை திரும்பிய சரணை அவரது பெற்றோர் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் சரணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், சரண் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வெங்கடேசுக்கு இதுகுறித்து தெரிவித்தனர். வெங்கடேஷ், சரண் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார். 
அப்போது சரண், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Mylapore
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் தங்கி இருந்த அறையில் இருந்து தற்கொலைக்கான கடிதம், செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவன் சரண், தனது செல்போனில் கோல்டு காயின்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது. அதில் அதிகளவில் பணத்தை கோல்டு காயின்ஸ் விளையாட்டில் இழந்ததும், இதற்காக பலரிடம் சரண் கடன் வாங்கி இருந்ததும், வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

From around the web