5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... அரியலூர் அருகே பரபரப்பு 

 
Ariyalur
அரியலூர் அருகே பழையத்துணி என்று சொல்லி கடத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் சிலகால் என்ற இடத்தில் காப்பலூர் காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பபோது, ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று சென்றது. அதனை கண்ட காவல் ஆய்வாளர் லாரியை சோதனை செய்ய முற்படும்பொழுது, லாரி ஓட்டுநர் லாரியை வேகமாக இயக்கியுள்ளார்.
Tobacco
அப்போது சாலையில் சென்ற நாயின் மீதும் மோதிவிட்டு, நிற்காமல் சென்றதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக லாரியை பின்தொடர்ந்து வழிமறித்து, ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டார்.
Ariyalur
லாரியில் என்ன கொண்டு போகிறீர்கள்? என்னனென்ன பொருட்கள் உள்ளது? எனக் காவலர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, வண்டியில் பழையத்துணிகளை கொண்டு செல்வதாக கூறிய ஓட்டுனரிடம், பொருட்களுக்கான லைசென்ஸை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். 
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியதால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து லாரியில் ஏறி சோதனை மேற்கொண்ட போலீசார் அதில் இருந்த 5 டன் எடையுடைய சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கண்டுபிடித்தனர்.   

From around the web