கோவையில் நடு ரோட்டில் கொடூரமாக தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள்..!

 
School-students-brutally-attacked-in-the-middle-of-the-road

கோவை அருகே நடு ரோட்டில் கொடூரமாக தாக்கி கொண்ட பள்ளி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது திடீரென மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து சண்டையிட்டனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் நின்று ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியான மாணவிகளும், பொது மக்களும் அங்கிருந்து தள்ளி சென்று விட்டனர். தொடர்ந்து மாணவர்கள் சண்டையிட்டு கொண்டும், தாக்கி கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும், பள்ளிக்கு நேரடியாக சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

From around the web