ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி... கண் கருவிழி மூலம் பொருட்கள் வினியோகம்.. அமைச்சர் தகவல்

 
sakkarapani

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் கருவிழிகளை பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி சட்டபேரவையில் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில்  கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது.

Sakkarapani

இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும்.

தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

Ration

அதேபோல விலையில்லா வேட்டி, சேலை குறித்த கேள்விக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் விலையில்லா வேஷ்டி வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

From around the web