தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தனியார் பால் விலை உயர்வு..! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
Milk

தமிழ்நாட்டில் இன்று முதல் தனியார் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசின் ஆவன் நிறுவத்தின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், தனியார் பால் நிறுவனங்களான திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Milk

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தயிர் (TM Curd) 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Heritage

ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web