வரும் 26-ந் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

 
PM-Modi-departs-from-delhi

பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் மோடி, மத்திய அரசின் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளதாகவும், மதுரை - தேனி அகல ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

சென்னை வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுக்கும், பாஜகவுக்கும் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டாலும், பாஜக தலைமையிடம் திமுக அனுசரணையாக செல்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கும் இந்நேரத்தில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

From around the web