தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!! போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த திண்டுக்கல்.!

 
Modi

திண்டுக்கல் காந்திகிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி நாளை வருகை தருகிறார்.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 2 நாள் பயணமாக நாளை முதல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 10.30 மணியளவில் கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் பெங்களூரு - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ள பிரதமர், தொடர்ந்து பாரத் கௌரவ் காசி தரிசன சிறப்பு ரயிலையும் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் 11.30 மணியளவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாவது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Gandhigram

பிற்பகலில் தமிழ்நாடு வரும் பிரதமர், 3.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பல்கலைக்கழகத்தில் 2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க பாரத பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில்  300 நபர்கள் அமர கூடிய தீவிர ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதன்கிழமை முதல் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் காந்தி கிராமம் கொண்டுவரப்படுகிறது. மத்திய படையினர் பாதுகாப்பு அல்லாமல் சுமார் 4 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பாஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

MKS

பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் இருந்து காந்தி கிராமம் செல்ல இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கரூர்-மதுரை பைபாஸில் தோமையார்புரம் முதல் காந்தி கிராமம் நுழைவு வாயில் வரை பிரம்மாண்டமான வரவேற்புக்கு திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து 12-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

From around the web