சிவகாசியில் ப்ளஸ் 1 மாணவி திடீர் தற்கொலை... தொடரும் சோகம்!

 
Sivakasi

பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய ப்ளஸ் 1 மாணவி தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது இளைய மகள் யோகலட்சுமி (17). இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.

suicide

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற யோகலட்சுமி, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் உடலை கைப்பற்றி மாரனேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sivakasi

சமீபத்தில் பள்ளி மாணவிகள் உயிரிழப்பு நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்தார். மிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் அடங்கியதும், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், சிவகாசியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web