பள்ளி கழிவறையில் ப்ளஸ்-1 மாணவிக்கு குழந்தை!! புவனகிரியில் அருகே பரபரப்பு

புவனகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறை அருகே பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூா் மாவட்டம் புவனகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் கழிப்பறை அருகே பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. விசாரணையில் அந்தப் பள்ளி மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது எனத் தெரியவந்தது.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் சுரேஷ் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புவனகிரி காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி தலைமையிலான போலீசார் அந்தப் பச்சிளம் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவிக்கு பள்ளிக் கழிவறையில் 8 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், பின்னா் அந்தக் குழந்தையின் சடலத்தை மாணவி அதே பகுதியில் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.
போலீசார் அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் தான் கா்ப்பம் அடைந்ததாக மாணவி தெரிவித்தாராம். இதையடுத்,து அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.