தயவு செய்து கடையை மூடுங்கள்... காலில் விழுந்த எம்எல்ஏ!! வைரல் வீடியோ 

 
Pmk

ஓமலூர் அருகே மது கடையை மூடக்கோரி சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்து நாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதிக குடியிருப்பு நிறைந்த அப்பகுதியில் அரசு பள்ளி, வார சந்தை, அம்மா பூங்கா உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் அப்பகுதியில் உள்ள மக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு போதை ஆசாமிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர்.
Pmk
இந்த நிலையில் அந்த கடையை அகற்ற கோரி கடந்த மாதம் 7-ம் தேதி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் (பாமக) தலைமையில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஒரு மாதத்தில் இந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதால் பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஒரு மாதமாகியும் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாமல் அதே பகுதியில் செயல்பட்டு வந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நேற்றுடன் மது கடை மூடுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதாகவும் தொடர்ந்து நாளை மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியர்களிடம் கூறினார்.


 

மேலும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து தயவு செய்து கடையை மூடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மது கடையை மூடக்கோரி சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web