பள்ளியை முற்றுக்கையிட்ட பெற்றோர்கள்... மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் பேசிய கணித ஆசிரியர் கைது

 
sattur

மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசிய கணித ஆசிரியர் தாமேதரன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் புதுச்சூரங்குடி, நடுச் சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம், பத்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 270-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 16-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Sattur

இந்த நிலையில், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் தாமோதரன் என்பவர், 10-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர், பள்ளி முன்பு கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில், ஏராளமான போலீசார் அரசுப் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளிடம் முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Sattur

பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட கணித ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web