தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு.. மல்லுக்கட்டும் வீரர்கள்! மாட்டுப் பொங்கலில் விழாக்கோலம் பூண்ட மதுரை

 
Jallikattu

மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று (ஜன. 16) மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Palamedu

சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற பனியன் அணிந்து மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

Pudukottai-jallikattu

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த மாடுபிடி வீரர்கள் இரண்டு பேருக்கு கார்களும், சிறந்த காளைகளுக்கு, இருசக்கர வாகனம், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

From around the web