ஜூலை 27-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

 
Anbil-Mahesh

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற 27 முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

Anbil-Mahesh

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பணியாற்று வரும் அந்தப் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

school

மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

From around the web