உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி.. ‘Bye Bye Miss U ரம்மி’ என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!!

 
Namakkal

ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அறங்கேறி வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

rummy

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மகன் சுரேஷ் பி.காம் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததார். நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ், ‘வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம் நன்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். மேலும் ஆன்லைன் ரம்மியில் இருந்து மீளமுடியவில்லை எனவும் Bye Bye Miss U ரம்மி’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Namakkal

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில், “தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது தன்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

கடந்த 28-ம் தேதி தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பிரபு என்பவர், ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்த விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web