தேனி செல்லும் வழியில்... உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.!

 
Inspection-at-the-Usilampatti-Fire-Department-Office

உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று மாலை மதுரை விமான நிலையம் வந்தார்.

இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக தேனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்தின் பொது நாட்குறிப்பு பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்து பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர், அந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, உசிலம்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த முதல்வர், அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

From around the web