பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்!!

 
bus

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுகின்றன.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். இதனையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் (மெப்ஸ், ரயில் நிலையம்), கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 12-ம் தேதி (இன்று) முதல் 14-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Bus

இந்த பேருந்து நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில், பயணிகளின் வசதிக்காக 340 சிறப்பு இணை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 127 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 115 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு 57 பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்துக்கு 8 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு 26 பேருந்துகளும், பாரிமுனை பேருந்து நிலையத்துக்கு 7 பேருந்துகளும் என மொத்தம் 340 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் படையெடுக்க தயாராகி விட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14-ம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Bus

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்தில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 73,470 பேரும் பிற மாவட்டங்களுக்கு இடையே 90,881 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகின்றன.

From around the web