ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
school

மமேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு வரும் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

melmaruvathur

அந்த வகையில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 1972-ம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 51வது ஆடிப்பூரம் விழா கோலாகலமாக வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

Local-holiday

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுா் விடுமுறை நாள், ஆகஸ்ட் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web