ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிவிப்பு

 
OPS

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

EPS

இந்த நிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவுக்கு இந்த தொகுதியை தமாகா விட்டுக்கொடுத்தது. எனவே ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம்.

EPS-OPS

சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன் என்று கூறியுள்ளார்.

From around the web