திருமணமான 5வது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை! தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

 
Thiruvidaimaruthur

தஞ்சாவூர் அருகே திருமணம் ஆன 5-ம் நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது இரு வீட்டாரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் பிரசாத் (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால் ஊர் திரும்பி உள்ளார். இவருக்கு கடந்த 5-ம் தேதி பந்தநல்லூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.

Suicide

இந்த நிலையில் திருமணமானதால் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய புது மாப்பிள்ளை பிரசாத் சோகத்துடன் காணப்பட்டிருந்தார். கடந்த இரு தினங்களாக மனைவியுடன் சரியாக பேசாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனைப் பிரசாத் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இன்று கறிவிருந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்ட பிரசாத், யாரும் எதிர்பாராத விதமாக தூக்குப் போட்டு கொண்டார். ஒரு கதவைத் சாத்திக் கொண்டதை அறிந்த அவரது பெற்றோர் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Thiruvidaimaruthur

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவிடைமருதூர் போலீசார், பிரசாத் தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஐந்தே நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web