மானாமதுரையில் தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண்... கண்ணீர் விட்டு கதறும் தாய்!! 

 
Manamadurai

மானாமதுரை அருகே தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கிய நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்து. இவரது மகள் ஜெபஸ்லீ (23). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை கிராமத்தை சேர்ந்த திரவியம் மகன் ஜெகதீசுக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்தனர். ஜெகதீஷ் முதுகுளத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெபஸ்லீ திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை போலீசார் ஜெபஸ்லீ உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Manamadurai

இதற்கிடையே ஜெபஸ்லீ சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் மானாமதுரை போலீசில் புகார் அளித்தனர். மேலும் தற்கொலைக்கு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர்தான் காரணம் என்றும், அவர்களை கைது செய்யுமாறு கோரி மானாமதுரை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதையொட்டி அங்கிருந்த ஜெகதீசையும், அவரது உறவினர்களையும் தாக்க முயன்றனர். அதில் அரசு மருத்துவமனை கண்ணாடி சேதம் அடைந்தது. உடனே ஜெகதீசை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். இதற்கிடையே ஒரு அறையின் கண்ணாடி உடைந்து சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜூக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்றார்.

Manamadurai

இந்த சம்பவத்தை தொடர்நது அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை 5 மணி வரையிலும் ஜெபஸ்லீயின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

From around the web