மாணவி ஸ்ரீமதி வழக்கில் வெளியான புதிய ஆதாரம்.. பரபரப்பு

 
Srimathi

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Srimathi

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் தாய் செல்வி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Srimathi

இந்நிலையில், மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிடப்பட்டது.

From around the web