தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 
MAS

தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

Monkey-pox

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றார்.

Monkey-pox

மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும். உக்ரைன் மாணவர்கள் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்ற உத்தரவிற்காக நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

From around the web