மே 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Ooty

நீலகிரி மாவட்டத்திற்கு மே மாதம் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவில்லை. தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 20ம் தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது. இதனையடுத்து அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், ஜூன் 4-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web