என் சாவுக்கு குமரன் அம்மாதான் காரணம்... ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட 4 மாத கர்ப்பிணி!!

 
Velachery

வேளச்சேரியில் திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் (37) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, ‘நீ அதிகம் படிக்கவில்லை. ராசியில்லாதவள். குறைவாக சாப்பிடு’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

velachery

மாமியார் சாந்தியின் தொடர் கொடுமையால் இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். திருமணம் ஆகி 5 மாதமான நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதியை சமாதானம் செய்து அழைத்து செல்லக்கூட அவரது கணவர் குமரன் வராமல் இருந்துள்ளார்.

இதனால் கணவரும் தாய் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் இருந்த இந்துமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தனது அக்காவிற்கு வாட்சாப் மூலம் அனுப்பிய ஆடியோ ஒன்றில் ‘என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம்’ என்று அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

இதை அவரது அக்கா பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் இந்துமதி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளச்சேரி போலீசார் உடலை கைபற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

From around the web