பிறந்த 10வது நாளில் குழந்தை கடத்தல்... நரபலியா? தாயை சிறையில் அடைத்த போலீஸ்!!

 
Trichy

பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிபதியின் உத்தரவின் பேரில் குழந்தையின் தாயை போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை கடந்த செப். 23-ம் தேதி கடத்தப்பட்ட வழக்கில் குழந்தையின் தாய் ஜானகி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். லால்குடி போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணை தொடர்பாக தலைமறைவாக இருந்த ஜானகியை போலீசார் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தை எங்கே உள்ளது என்பது குறித்து கைது செய்யப்பட்ட ஜானகியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பிரபு என்பவரின் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

baby

இதனிடையே போலீசார் ஜானகியிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது அவர் ஏதேதோ மழுப்பலாக பதில் அளித்து முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியுள்ளார். குழந்தை கடத்தப்பட்ட நான்கு மாதங்கள் கடந்து விட்டது.

நான்கு மாதங்கள் கடந்தும் குழந்தை மீட்கப்படாத நிலையில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் அவரது தாய் ஜானகி மீது காவல் துறையினர் ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் 3 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வழக்கறிஞர் பிரபு அவரது 2வது மனைவி சண்முகவள்ளியை தேடி வருகின்றனர்.

Lalgudi-PS

இந்த கடத்தல் சம்பவத்தில் குழந்தையை விற்பனைக்காக கடத்தினார்கள்? அல்லது நரபலி கொடுப்பதற்காக கடத்தினார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தற்போது திருச்சி முழுவதும் காட்டுத்தீ போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web