கேரள பெண்ணின் முகத்தில் 25 முறை பாட்டிலால் கிழித்த வாலிபர்.. ஒரு தலை காதலால் விபரீதம்!!

 
Chennai

ஒரு தலை காதலால் கேரள இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ள இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபு பேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் அடித்துள்ளார். இதனால் சோனு சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.பின்பு அந்த இளைஞர்  மதுபான பாட்டிலை உடைத்து முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், கைகளால் அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

Knife

இதைக் கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு ஓடி வர அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கோடு மதுபான பாட்டிலால் அடித்து காயப்படுத்திய நவீன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பாக சோனு ஜோசப் உடன் ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை கொடுத்து பின் பேசி வந்துள்ளார் என்பதும், தான் கப்பல் படையில் வேலை செய்வதாக கூறி இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சோனு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருப்பதை தெரிந்த நவீன், சோனுவிடம் தான் உன்னை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், நவீனை சந்திப்பதை சோனு தவிர்த்து வந்துள்ளார்.

Kilpauk

இந்த நிலையில் தொலைபேசி மூலமாக சோனு ஜோசப்புக்கு, நவீன் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் கொடுத்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னை முற்றிலுமாக தவிர்த்து வந்த சோனு ஜோசப்பை கொலை செய்யும் நோக்கோடு கடந்த 14-ம் தேதி மாலை சோனு ஜோசப்புக்காக நவீன் அபு பேலஸ் வாயிலில் காத்திருந்துள்ளார். பணி முடித்துவிட்டு வெளியே வந்த சோனுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு ஈடுபட்டுள்ளார்.

சோனு முடியாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த நவீன் மதுபாட்டிலை உடைத்து சோனுவின் முகத்தை குத்தி காயப்படுத்தியதும் பின்பு அவரை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நவீனிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web