காரைக்குடி இளவரசியான பிரான்ஸ்கிளி!! மாப்பிள்ளையை காத்திருந்து கரம்பிடித்தார்!

 
Karaikudi

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது காதலர் காரைக்குடி இளைஞரை இரு வீட்டார் சம்மதப்படி கரம் பிடித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி மாணிக்கவள்ளி. இந்த தம்பதிக்கு கலைராஜன் என்ற மகன் உள்ளார். பிரான்சில் பணிபுரிந்து வரும் தங்கராசு அங்கே தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருடைய மகன் கலைராஜன் அங்குள்ள கல்லூரி ஒன்றில் கம்பியூட்டர் சைன்ஸ் படித்து வந்தார்.

Karaikudi

அதே கல்லூரியில் ஜான் லுயிக், வெரோணிக் தம்பதியின் மகள் கயல் சைக்காலஜி படித்து வந்துள்ளார். கலைராஜனும், கயலும் நண்பர்களாக பழகி, நாளடைவில் இது காதலாகவும் மலர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது வீட்டில் இதுகுறித்து பேசியுள்ளனர். இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.

இதனையடுத்து, மணமகன் கலை ராஜனின் சொந்த ஊரான அமராவதி புதூரில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக மணமகள் கயலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து காரைக்குடி வந்திருக்கின்றனர்.

Karaikudi

இந்த திருமணத்தில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மணமகன் வீட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

From around the web