ஜல்லிக்கட்டு போட்டியில் கெடுபிடி... மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை!!

 
Madurai

அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தை முதல்நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Madurai

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தது. மேலும் இரண்டு தவனை தடுப்பூசி கட்டாயம் என்றும் அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்போது அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Jallikattu

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே வீரர்கள் போட்டியில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web