பொங்கல் முடிஞ்சு 2 வாரம் ஆகுது.. இலவச வேட்டி சேலை எப்போது? ஓபிஎஸ் கண்டனம்!!

 
Vetti-selai Vetti-selai

பொங்கல் பண்டிகையொட்டி, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்க வில்லை என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து 14 நாட்கள் ஆகியும் இதுவரை வேட்டி சேலைகள் வழங்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Vetti-selai

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர். அவர்களால் ஏழையெளிய மக்களுக்காக, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் 1983-ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வேட்டி-சேலைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் கடந்தும் நியாய விலைக் கடைகள் மூலம் இலவச வேட்டி-சேலை வழங்கப்படாதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச வேட்டி-சேவை வழங்கும் திட்டத்தினை திமுக அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும். இதனைத் தொடர வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டம் நடத்துவதாகவும் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த கைத்தறி மற்றும் துணிநால் துறை அமைச்சர், இதற்கான நிதி 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலவச வேட்டி-சேலைத் திட்டம் தொடரும் என்றும் உறுதி அளித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முள்ளீட்டு இலவச வேட்டி-சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், இதற்கெ கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே வடிவமைப்பில் வழங்கப்பட்டு வந்த வேட்டி-சேலையை மாற்றி, பத்து வடிவமைப்புகளில் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே விநியோகிக்க மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிகளில் செய்திகள் வந்தன. இந்தப் புதிய வடிவமைப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டது போன்ற புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. ஆனால் இன்று பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி-சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

OPS

2022-2023 ஆம் ஆண்டிற்கான நிடுநிலை அறிக்கையிலேயே இலைச் வேட்டி-சேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் திட்டத்தை குறித்த காலத்திற்குள் செயப்படுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் நிறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஒரு திட்டம் எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். ஆனால், அரசினுடைய செயல்பாடு பொங்கல் பண்டிகை முன்கட்டு இலவச வேட்டி - சேலை வழங்கப்படும் என்ற ஒரு குறிக்கோளையை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகையன்று புத்தாடை அணிந்து கொள்ள இயலாத சூழ்நிலை பொரும்பாலான ஏழை ஏளி மக்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்டது. இது மட்மில்லாமல் பொங்கல் பண்டிகையே முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிற்கு இருக்கிறது.

எனவே, முதல்வர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி-சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அஇஅதிமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.

From around the web