சமையல் கத்துக்க சொன்னது குத்தமா... திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!

 
Nellai

நெல்லை அருகே சமையல் கற்றுக்கொள்ள சொல்லி தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூனைஞ்சிபட்டி அருகே உள்ள கீழகோடன் குளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் குப்புராஜ். இவரது மனைவி கனகமணி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். குப்புராஜ் ஏற்கனவே இறந்த நிலையில் அவரது மகளான கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமண நிச்சயிக்கப்பட்டு பிப்ரவரி 1-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.

poison

இந்த நிலையில் கிறிஸ்டிலா மேரி வீட்டு வேலை செய்யாமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் உனக்கு திருமணம் நடக்க உள்ளது, அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக் கொள்ள என கண்டித்துள்ளார். இதனால் மனவேதனடைந்த கிறிஸ்டில்லா மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனால் மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Moolakaraipatti PS

இதுகுறித்து அவரது அண்ணன் முத்தமிழ் பீட்டர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web