நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 
anbil mahesh

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜன. 18) பள்ளிகள் விடுமுறை என்ற தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது.

school

இதனிடையே நாளை (ஜன. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுத்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு நாளை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 18 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

Anbil-Mahesh

பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்ப பொதுமக்களுக்கு ஏதுவாக ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று காட்டுதீ போல் பரவியதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு அனைவரது சந்தேகத்தையும் தீர்த்துள்ளது.

From around the web