தெலுங்கானா புதிய தலைமை செயலக திறப்பு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

 
KCR-MKS

தெலுங்கானா மாநில தலைமைச்செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்திற்கு ஐதராபாத் தலைநகரமாக உள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அக்கட்சியின் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார்.

Telangana

இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம் என்று கூறப்படும், இந்த புதிய தலைமைச் செயலகம், 7 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.600 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். பிப்ரவரி 17-ம் தேதி, செகந்திராபாத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

MKS-KCR

ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரில் ராகுலின் நடைபயணம் நிறைவுபெறும் நிகழ்விலும் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும், பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தல் அணி சேர்க்கும் தலைவர்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

From around the web