சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி!!

 
minister-says-tennis-open
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்தச் சூழலில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார்

தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறம் என தெரிவித்தார்.அதற்கான அனுமதி இன்று கிடைத்துள்ளது என தெரிவித்த அவர், விளையாட்டு அரங்கம் போட்டிக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டார். அப்பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்போருக்காக 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

From around the web