எனக்கு படிப்பு சுத்தமா விரல... 3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு ப்ளஸ் 2 மாணவி தற்கொலை!! அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்

 
virudhachalam

விருத்தாசலத்தில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆயர்மடத்தை சேர்ந்த கோபி-இளவரசி தம்பதியினர். இவர்களுது 2வது மகள் சிவகாமி. இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி, மாதாந்திர தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

suicide

இரவு பெற்றோர்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது மாணவி தூக்கில் தொங்கியுள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்குக்கான ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி, வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், எனக்கு படிப்பு சுத்தமாக விரவில்லை, இன்று நடந்த தமிழ் தேர்வு சரியாக எழுதவில்லை, மார்க் வாங்க வாய்ப்பு இல்லாமல் போச்சு.. அதேபோல ப்ளல் 2 தேர்வில் மதிப்பெண் எடுக்கமுடியாது போல.. ஐஏஎஸ், அக்ரி அதிகாரியாக வேண்டும் ஆசை... நல்லாதான் படிக்கிறேன்.. ஆன தேர்வு எழுதும் போது எல்லாம் மறந்து போகுது... ப்ளல் 2 வகுப்புல பெயிலான எனக்கு திருமணம் செய்து வச்சுருவீங்கனு பயமாக இருக்கு... என்று எழுதியுள்ளார்.

Virudhachalam

இதையடுத்து மாணவி சிவகாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web