750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய ‘ஆசாதி சாட்’.. நாளை மறுநாள் வின்னுக்கு அனுப்பும் இஸ்ரோ

 
SSLV

அரசுப் பள்ளி மாணவிகள் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7-ம் தேதி எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவிகள் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கியுள்ளது.

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது. இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

SSLV

இவர்கள் ‘ஆசாதி சாட்’ எனும் சிறிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்குவார்கள். இது சுதந்திர தினத்தையொட்டி விண்ணில் ஏவப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி சம்பந்தமான அறிவை வளர்ப்பதற்கு இந்த திட்டம் பெரிதளவில் பயன்படுத்தப்படும்.

தற்போது தயாரித்து முடிக்கப்பட்டுள்ள ‘ஆசாதி சாட்’  செயற்கைக்கோள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோளை தயாரிக்கும் பணி கடந்த பிப்ரவரியிலிருந்து தொடங்கப்பட்டது.

SSLV

வானிலை, இதர புற சூழல் என எல்லாம் சாதகமாக அமைந்தால், சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து காலை 9.18 மணிக்கு ஏவப்படும் செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆசாதி சாட்’ எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web