மனைவி வீட்டுக்கு வந்தால் தான் இறங்குவேன்... செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன்!

 
tower

சென்னை அருகே மனைவியிடம் சேர்த்து வைக்கச் சொல்லி செல்போன் டவரில் ஏரி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் குமார். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

tiruvottiyur

இதனால் கோபமடைந்த செந்தில் குமார் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், நான் செல்போன் டவரின் மேல் இருக்கிறேன். சண்டைபோட்டு வெளியே சென்ற எனது மனைவியை அழைத்து வந்தால் மட்டுமே கீழே இறங்குவேன். இல்லை என்றால் குதித்து விடுவேன் என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து செந்தில் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tiruvottiyur

அதன் பின்னர் அவரது மனைவியை அங்கு வரவழைத்த போலீசார், அவரை செந்தில் குமாருடன் செல்போனில் பேசவைத்துள்ளனர். இதன்பிறகே செந்தில் குமார் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறியுள்ளனர்.

மனைவியிடம் சேர்த்து வைக்கச் சொல்லி செல்போன் டவரில் ஏரி வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web