இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்!!

 
Tomato

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தினமும் 500 வாகனங்களில் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்த நிலையில், இன்று காலை 700 வாகனங்களில் 6,500 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன.

Market

இதன்காரணமாக அனைத்து காய்கறிகளின் விலைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு கிலோ நாட்டு தக்காளி 60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ. 5-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பெங்களூரூ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ரூ. 15-க்கு விற்பனையானது.

ஒரு கிலோ கேரட் 80 ரூபாயிலிருந்து ரூ.45-க்கும் கத்திரிக்காய் 40 ரூபாயிலிருந்து ரூ. 20-க்கும் அவரைக்காய் 60 ரூபாயிலிருந்து ரூ. 15-க்கும் சவ்சவ் 30 ரூபாயிலிருந்து ரூ. 20-க்கும் வெண்டைக்காய் 40 ரூபாயிலிருந்து ரூ. 20-க்கும் விற்பனையானது.

அதேபோல் பீட்ரூட் 50 ரூபாயிலிருந்து ரூ. 20-க்கும் முருங்கைக்காய் 60 ரூபாயிலிருந்து ரூ. 15-க்கும் முள்ளங்கி 25 ரூபாயிலிருந்து ரூ. 15-க்கும் புடலங்காய் 40 ரூபாயிலிருந்து ரூ. 20-க்கும் பீர்க்கங்காய் 60 ரூபாயிலிருந்து ரூ. 25-க்கும் விற்பனையானது.

Market

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், “கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 500 வாகனங்களில் இருந்து 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்கும் இல்லத் தரசிகள் மகிழ்ச்சியோடு வாங்கி செல்கின்றனர். ஆனால் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த விலை குறைவு இன்னும் ஒரு மாதம் நீடிக்கும்” என்றார்.

From around the web