கோர விபத்து!! சாலை வளைவில் திரும்பிய குட்டியானை மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி!

 
Theni

ஆண்டிபட்டி அருகே சாலை வளைவில் திரும்பிய குட்டியானை மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கி மாலை 4.30 மணியளவில் ஆண்டிபட்டியை கடந்து அரசு பேருந்து மதுரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு நூல் ஏற்றிக் கொண்டு குட்டியானை டி.சுப்புலாபுரம் கிராமத்திற்கு சென்றது.

Accident

அப்போது குட்டியானை வந்த வேகத்தில் சாலை வளைவில் திரும்பியபோது, எதிர்புறம் குமுளியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து பக்கவாட்டில் மோதி நின்றது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Andipatti

இதில் சங்கரன் நாராயணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web