வரும் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... தமிழ்நாடு அரசு உத்தரவு!

 
Palani

பழனி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோவில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக திகழ்கிறது. இந்த கோவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் திருபுகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் புகழ்ந்து பாடிய தலம்.

தை மாதம் முழுவதும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் ஆனது பழனியில் வரும் ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது.

leave

இந்த நிகழ்வை காண கோயிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தற்போது அரசு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் பக்தர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் 47,000 பேர் விண்ணப்பித்துள்ளதால் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனவரி 27-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Local-holiday

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடு செய்யும் விதமாக வரும் பிப்ரவரி 25-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web